டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஷேக்ஸ்பியரின் ஆங்கிலப் புலமை! புதிய செயலி!

நீங்கள் ஷேக்ஸ்பியர்  மொழிநடையில்  ஆங்கில புலமையுடன் மின்னஞ்சலோ குறுஞ்செய்தியோ யாருக்கேனும் அனுப்ப முடியுமா?

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:59 pm

உமா ஷக்தி.

நீங்கள் ஷேக்ஸ்பியர்  மொழிநடையில்  ஆங்கில புலமையுடன் மின்னஞ்சலோ குறுஞ்செய்தியோ யாருக்கேனும் அனுப்ப முடியுமா? நிச்சயம்  முடியும். கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு புதிய செயலியை அலைபேசி பயனாளர்களுக்காக அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதன் பெயர் ஷேக்ஸ்பீக் என்பதாகும். இதை உங்கள் அலைபேசியில் எளிதில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அலைபேசியில் உள்ள தட்டச்சு பலகையில் நீங்கள் குறுஞ்செய்தியை தட்டச்சு செய்யும் போதே அந்த வாக்கியத்தின் மற்ற வார்த்தைகளை அது எடுத்துத் தரும். 2016 ஆம் ஆண்டில் ஷேக்ஸ்பியர் இறந்து நானூறு வருடம் முடிகிறது. 2008 ஆண்டு நிறுவப்பட்ட ஸ்விஃப்ட் கீ நிறுவனம் அதை முன்னிட்டே இந்த செயலியை பல ஆராய்ச்சிக்களுக்குப் பின் தற்போது லண்டனில் வெற்றிகரமாக வெளியிட்டுள்ளது.

ஸ்விஃப்ட் கீ நிறுவனத்தின் வல்லுனர்கள் இதற்காக வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புக்கள் அனைத்தையும் பல முறை படித்தனர். ஷேக்ஸ்பியருக்கே உரிய பல பிரத்யேக வார்த்தைகளின் பயன்பாடுகளையும் இந்த செயலியில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு.

இந்த செயலியைப் பயன்படுத்தினால் தரமும் செறிவுமான ஒரு ஆங்கில உரையை உருவாக்கிவிடலாம். ஒரு போலி ஷேக்ஸ்பியராகவே நாம் உருவெடுக்கலாம். உதாரணமாக ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற வசனமான To be என்ற சொற்களை நீங்கள் டைப் செய்தால், அது உடனே அடுத்த வார்த்தைகளான Or not to be என்பதைத் தானாகவே எடுத்துக் காட்டும். அதே போல ‘இந்த உலகம்’ என்று நீங்கள் தட்டச்சினால் அடுத்த வரியான ‘ஒரு நாடக மேடை. இதில் ஆண்கள் பெண்கள் என அனைவருமே பாத்திரப்படைப்புகள்’ என்று அந்த வாக்கியத்தை முழுமையாக்கும்.

இது குறித்து ஸ்விஃப்ட் கீ நிறுவனத்தின் ஒரு தலைவரான சாரா ரவுலிங் கூறுகையில், ‘இந்த ஸ்மார்ட் ஃபோன் மூலம் ஷேக்ஸ்பியர் கண்டு அடைந்த எண்ணற்ற சொற்களை நீங்களும் பயன்படுத்தலாம். காலம் பல தாண்டியும் மிகவும் தனித்துவமாக விளங்கும் அந்த மகாகவியின் தேர்ந்த மொழிநடையும், நுட்பமான வாக்கிய அமைப்புக்களையும் அனைவரும் பயன்படுத்தி ஆங்கில மொழியில் அழகியல் சொற்களை உருவாக்கி மகிழலாம்.’ என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.