உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்...
இது சுய சரித்திரங்களின் காலம். பதவி இழந்த அமைச்சர்கள், உயர் பதவி வகித்து ஓய்வு பெற்ற அதிகாரிகள், மார்கெட்டை பறிகொடுத்த நடிகர்கள், விளையாட முடியாமல் மைதானத்தைவிட்டு வெளியேறிய விளையாட்டு வீரர்கள் எல்லாரும் அவசர அவசரமாக சுய சரித்திரம் எழுதி புத்தகமாகப் போடுகிறார்கள்.










