விஷாலின் அண்ணி ஸ்ரியா ரெட்டி, கிரேய்க், பூஜா, லேகா வாஷிங்டன், பலோமா, எனப் பல யூத்ஃபுல் அண்ட் கிளாமர் ஆங்கர்கள் கிளம்பி வந்து இளசுகளின் தூக்கத்தைக் கெடுத்த அந்தக் காலகட்டத்தின் தென்னிந்திய எம் டிவியாகக் கொண்டாடப்பட்டது எஸ் எஸ் மியூசிக். (சதர்ன் ஸ்பைஸ் மியூசிக்). இதில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசினாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அத்தனை ரசிகர்களுக்கும் புரியும் வண்ணம் மழலைத்தனமாக பிராந்திய மொழிகளும் பிராந்தி, விஸ்கி போல அவ்வப்போது அந்தச் சேனலில் பரிமாறப்படுவது உண்டு.