'சாரே ஜகான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா' என்ற உருதுப் பாடலே காந்தி தேசிய கீதமாக பரிந்துரைத்த பாடல், விடுதலை இந்தியாவின் பாராளுமன்றத்தில் ஒலித்த முதல் பாடலும் அதுவே. இஸ்லாமியர் எழுதிய பாடலை இந்துக்கள் ஏற்றுக் கொள்ள மறுக்க, அவர்கள் கூறிய வந்தே மாதரம் பாடல்களுக்கு இஸ்லாமியர் சமய அடிப்படை கூறி மறுக்க இடையில் சசரசம் செய்து கொள்ளும் முயற்சியில் தாகூரின் பாடல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் ஒரு கூற்று உண்டு. நேருவுக்கும் காந்திக்கும் பிடித்த பாடல், ஆங்கிலேயருக்கு எதிராக எழுச்சியுடன் பாடப்பட்ட பாடல் 'சாரே ஜகான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா' பாடல்தான். பின்னர் 1950 இல் வந்ததுதான் தேசிய கீதம்.