'அங்கே நான் மட்டுமே இந்தியாவைச் சேர்ந்தவள், என்னைச் சூழ இருந்தவர்களில் ஒருவர் கூட இந்தியரில்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் நெர்வஸாகவே உணர்ந்தேன். ஆனால் அங்கே அவர்கள் எனக்குக் கொடுத்த சுதந்திரம் மற்றும் மரியாதை அனைத்தையும் இப்போது நினைத்துப் பார்க்கையில் மிக, மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். அங்கே, பிளேபாய் போட்டோஷூட் தளத்தில் நான் உணர்ந்த சுதந்திரத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அது மிக, மிகப் பரிசுத்தமான உணர்வு, முற்றிலும் அந்நியமான அந்த இடத்தில் அதுவரை நான் அறிந்திராத அந்நியர்களுடன் பணிபுரிந்த போது, அங்கு அனைவருமே என் மீது மிகுந்த அக்கறையுடன் இருந்தார்கள். அங்கிருந்த அனைவருமே அவரவர் துறையில் வல்லுனர்கள் மட்டுமல்ல மிக மிக புரஃபஷனல் உணர்வு கொண்டவர்களும் கூட என்பதால் எனக்கு அவர்களுடன் பணியாற்ற லகுவாக இருந்தது. ஒருமுறை நான் பிளே பாய் இதழின் அட்டைப்படத்தில் தோன்ற வேண்டும் என்று முடிவு செய்தபின், அதைப் பற்றி மேலும் சிந்தித்துக் குழப்பிக் கொள்ளவே இல்லை. ஒரு முறை முடிவு செய்து விட்டேன்... இனி அதைப் பற்றி யோசிக்க எதுவுமில்லை. நான் அதற்காகவே பிறந்திருக்கிறேன். அதன் மூலம் வரலாற்றில் என் பெயர் இடம்பெறும் என்று நம்பினேன். என் கனவு பலித்தது.'