நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்பட தமிழ்நாடு வசூல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யாவே ஆச்சரியப்படும் அளவிற்கு கருப்பு திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாது பல பகுதிகளிலும் கருப்புக்கு இன்று வரை டிக்கெட் விற்பனைகள் சிறப்பாகவே நடைபெற்று வருவதால் திரையரங்க உரிமையாளர்கள் வரை மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
விரைவிலேயே, ஹிந்தியிலும் மொழி மாற்றம் செய்து வெளியாகவுள்ளது. இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 280 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கருப்பு தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ. 150 கோடியை வசூலித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் திரைப்படங்களிலேயே இதுவே அதிக வசூலைச் செய்திருப்பதால் அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
The Tamil Nadu box office collections for actor Suriya's film karuppu have been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






