கருப்பு திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட இளையராஜா பாடல் அவமதிக்கப்பட்டதாக பலர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
நடிகர் சூர்யா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான கருப்பு திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாக மாறியுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது தெனனிந்தியளவில் வரவேற்பு கிடைத்துள்ளதால் முதல் மூன்று நாள்களிலேயே ரூ. 100 கோடி வசூலைச் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இத்திரைப்படத்தின் கதை ரீதியாக சில மாற்றுக் கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன.
முக்கியமாக, பணத்திற்காக உண்மைக்கு எதிராக வாதாடும் வழக்குரைஞர்கள் ஒன்றிணைந்து போராடுவது போன்ற காட்சியில் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி, இளையராஜாவின் ‘போராடடா ஒரு வாளேந்தடா’ பாடலைப் பயன்படுத்தியிருந்தார்.
அப்பாடல் பல ஆண்டுகளாக குறிப்பிட்ட சமூக மக்களின் உரிமைக்கான பாடலாக இருக்கிறது. அப்படியான பாடலைத் தேவையற்ற இடத்தில் பயன்படுத்தியதுடன் இளையராஜாவின் காப்புரிமை விவகாரத்தைக் கிண்டலடித்து அவமரியாதை செய்துள்ளதாக ஆர்ஜே பாலாஜியைப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதனால், படத்திலிருந்து அப்பாடல் நீக்கப்படுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










