நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டா பதிவில், ”தூங்கும் சிங்கத்தை எழுப்பக் கூடாது” எனக் கூறியுள்ளார். இந்தப் பதிவில் நடிகை குஷ்பு கமெண்ட் செய்துள்ளது வைரலாகியுள்ளது.
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை 2024 செப்டம்பரில் விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இருப்பினும் இவர்களது வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இந்த நிலையில், கெனிஷா தனக்கு ஏற்பட்ட சைபர் தாக்குதலால் சென்னையை விட்டும் ரவியை விட்டும் விலகுகிறேன் எனக் கூறியிருந்தார். இதற்கு ரவி மோகனும் பேட்டி அளித்திருந்தார்.
ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில், “தூங்குகிற சிங்கத்தை எழுப்பக்கூடாது. அவள் சிங்கப்பெண்ணாக இருந்தால் கடவுள் உதவுவார். எனது மரியாதையான அமைதி பலவீனமென தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது அல்லது அதனை சாதகமாக பயன்படுத்தக்கூடாது.
எனது குழந்தைகளுக்காகவும் எனது மரியாதையைக் காப்பதற்காகவும் தேவைப்பட்டால் எனது சௌகரியமான இடத்தைவிட்டு வெளியே வந்து, உண்மையுடன் உலகைச் சந்திப்பேன். ஏனெனில், உண்மைதான் எப்போதும் வெல்லும்” எனக் கூறியுள்ளார்.
இந்தப் பதிவில் நடிகை குஷ்பு, “தாயுடன் எப்போதும் மோதாதீர்கள். நீ சிங்கக் குட்டியுடன் இருக்கும் பெண் சிங்கம். உனது கூடுதல் பலம் கிடைக்கட்டும் பேபி” எனக் கமெண்ட் செய்துள்ளார்.
Summary
You never wake a sleeping lion aarti ravi and kushboo comments
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









