தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாழ்க்கையைக் கெடுத்த 3 எழுத்து இட்லி நடிகை... குற்றம் சுமத்திய ரவி மோகன்!

நடிகர் ரவி மோகன் குற்றம் சுமத்திய 3 எழுத்துகொண்ட நடிகை குறித்து...

News image

ரவி மோகன். - படம்: பிடிஐ

Updated On :16 மே 2026, 3:13 pm IST

நடிகர் ரவி மோகன் 3 எழுத்துகொண்ட ஹிந்தி நடிகை தனது வாழ்க்கையைக் கெடுத்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து பெற்ற பிறகே தான் நடிக்க வருவேன் எனக் கூறியுள்ள ரவி மோகன் 3 எழுத்துகொண்ட நடிகையை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்திக்கு இடையே 2024 செப்டம்பரில் விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இருப்பினும் இவர்களது வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

கெனிஷா சமூக வலைதளத்தை விட்டும் சென்னையை விட்டும் தற்காலிகமாகச் செல்வதாக அறிவித்திருந்தார். சைபர் வன்முறை நடந்ததால்தான் கெனிஷா இப்போது விலகியுள்ளதாக ரவி மோகன் குற்றம்சுமத்தியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் ரவி மோகன் 3 எழுத்துகொண்ட ஹிந்தி நடிகையைக் குறிப்பிட்டு கூறியதாவது:

சில விஷயங்களை தெளிவாகக் கூற வேண்டும். 3 எழுத்து கொண்ட நடிகையை நான் பலமுறை கூறியுள்ளேன். பெயரைச் சொன்னால் வழக்குப் பதியப்படும் என்பார்கள். அந்த இட்லி நடிகையைதான் கூறுகிறேன்.

அந்த நடிகையின் தலைமுறையைச் சேர்ந்த 3 நடிகர்கள் என்னிடம் ‘அந்த நடிகையால் எங்களது குடும்பத்தை கெடுக்க வந்த இவ அவள் என அசிங்கமான வார்த்தையில் கூறினார்கள்’. மூன்று பேரின் வாழ்க்கையைக் கெடுக்க தயாராக இருந்த அந்த பொம்பள என்னைக் குறை சொல்கிறார். வேறு எதாவது பிரச்னை வந்தால் அப்படியே பெண்ணியம் என ஒரு நாடகம் நடத்துவார்.

என்னைப் பற்றி பேச துப்பு இருக்கிறதா? எப்படித்தான் இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் என்றே புரியவிலை. நான் யார்? நீ யார்? தனிப்பட்ட விதத்தில் தொடாதே. என்னை விட நன்றாக நடிக்கிறாயா நடித்துக்கொள். விருது வாங்கிப்பதென்றால் வாங்கிக்கொள். நானே காலில் விழுகிறேன். ஆனால், என்னை தவறானவன் என்று கூற நீ யார்? நீ என்னைப் பெற்றெடுத்தாயா? பிளடி எனக் கூறினார்.

இந்த நடிகை யாராக இருக்கும் என்ற விவாதம் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Summary

The 3-Letter-Name 'Idli' Actress... Ravi Mohan Levels Accusations!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.