திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

த்ரிஷா போல விஜய்யுடன் பயணிப்பீர்களா? கண்டனம் தெரிவித்த மாளவிகா மோகனன்!

நடிகை மாளவிகா மோகனின் காட்டமான பதிவு குறித்து...

News image

நடிகை மாளவிகா மோகனன். - படம்: எக்ஸ் / மாளவிகா மோகனன்.

Updated On :16 மே 2026, 6:14 pm IST

நடிகை மாளவிகா மோகனன் தனது எக்ஸ் பக்கத்தில், “ஊடகங்கள் இனிமேலாவது கண்ணியமான கேள்வியைக் கேட்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்திருக்கிறார். விஜய்யின் ரசிகை எனக் கூறும் மாளவிகா மோகனன் தற்போது மலையாளம், ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

நடிகராக இருந்த விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டு, தற்போது தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கும் நடிகை த்ரிஷாவுக்கும் இடையேயான உறவு சமீப காலமாக பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் மாளவிகா மோகனனிடம், “நடிகை த்ரிஷா போல நீங்களுடம் விஜய்யுடன் பயணிப்பீர்களா?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.

இந்தக் கேள்வியால் மனமுடைந்த மாளவிகா மோகனன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நேற்று நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றிருந்தேன். எனக்கு தமிழக ஊடகங்கள் மீது மதிப்பும் மரியாதையும் இருக்கின்றது. ஆனால், சிலர் தொடர்ச்சியாக ஒரே மாதிரியான அறுவறுக்கத்தக்க, வைரலாக வேண்டுமென்றே கேள்விகளைக் கேட்கிறார்கள்.

தளபதி விஜய்யை எனக்கு ஏழாண்டுகளாகத் தெரியும். மிகவும் மரியாதை வைத்திருக்கிறேன். அவரை எனது நண்பர் எனும் கூறுமளவுக்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். அடுத்தகட்ட ஊடக சந்திப்பின்போதாவது மரியாதையாகவும் இதில் பலர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற கவனத்துடன் கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

Summary

Very distasteful questions that were completely unnecessary and sensational says Malavika about Vijay trisha related questions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.