பிரபல கன்னட நடிகர் திலீப் ராஜ் மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர் தீலிப் ராஜ் (47). தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் வரவேற்பைப் பெற்றவர் 2005-ல் பாய் ஃபிரண்ட் திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் பிளாக்பஸ்டர் திரைப்படமான மிலானாவில் (milana) வில்லனாக திலீப் நடித்திருப்பார்.
நாயகனாக, வில்லனாக, முக்கிய கதாபாத்திரங்களில் என இதுவரை 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த திலீப் ராஜ் இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
நடிகர் புனித் ராஜ்குமார் போல் குறைவான வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு திலீப் மறைந்த செய்தி, ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
The death of popular Kannada actor Dileep Raj due to a heart attack has caused shock.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








