மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

விஜய்க்கே வாக்கு! மறைமுகமாகக் கூறிய பிரபல நடிகர்!

பிரபல நடிகரின் பதிவு குறித்து...

News image

தவெக தலைவர் விஜய் - tvk

Updated On :22 ஏப்ரல் 2026, 11:27 am

நடிகர் விஜய்க்கு வாக்களிக்கப் போவதை பிரபல நடிகர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரங்கள் ஓய்ந்துவிட்டாலும் தமிழகத்தை ஆள்வது யார் என்கிற பரபரப்பு பேச்சுகளுக்கு பஞ்சமில்லை. சமூக வலைதளங்களில் கூட்டணி மற்றும் தனித்து தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்துகொண்டேதான் இருக்கின்றன.

தமிழகத்தில் நாளை (ஏப். 23) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் பலரும் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர். ஆச்சரியப்படுத்தும் வகையில் தவெகவுக்கு ஆதரவாக பல இளைஞர்கள் வெளிநாடுகளிலிருந்தும் வாக்கு செலுத்து சொந்த ஊருக்கு படையெடுக்கின்றனர்.

இந்த நிலையில், நடிகர் அருண் விஜய் வாக்களிக்க சென்னையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன் என இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுத் தெரிவித்திருந்தார்.

Story image

அதில், விஜய்யின் ’விசில் போடு’ பாடலைப் பின்னணியில் ஒலிக்கச் செய்திருப்பதால் அருண் விஜய்யும் தவெகவுக்கே வாக்களிக்க உள்ளதை குறிப்பிட்டுள்ளார். இதனைக் கண்ட விஜய் ரசிகர்கள் அருண் விஜய்யின் பதிவை வைரலாக்கி வருகின்றனர்.

A famous actor has mentioned that he intends to vote for actor Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.