மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கருப்பு படத்தின் அடுத்த பாடலைப் பாடும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?

நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் இரண்டாவது பாடல் பற்றி...

News image

கருப்பு பட போஸ்டரில் சூர்யா - X

Updated On :14 மார்ச் 2026, 11:18 am

நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் இரண்டாவது பாடலை பிரபல நடிகர் ஒருவர் பாடியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சூர்யா - இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ’கருப்பு’. இப்படத்தில் சூர்யா வழக்குரைஞராக நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, ஸ்வாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ், யோகி பாபு, நட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், கருப்பு படத்தின் வெளியீட்டிற்கு நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் நீண்டகாலமாகக் காத்திருகின்றனர்.

சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதல் பாடலான ‘காட் மோட்’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது இரண்டாவது பாடல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சாய் அபயங்கருடன் சிம்பு

சாய் அபயங்கருடன் சிம்பு

இரண்டாவது பாடலை பிரபல நடிகர் சிம்பு பாடியிருப்பதாகவும், விரைவில் பாடல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனை, உறுதிப்படுத்தும் விதமாக சாய் அபயங்கர் தனது ஸ்டுடியோவில் சிம்புவுடன் எடுத்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கருப்பு திரைப்படம் ஏப்ரல் வெளியீடாக வருமென்று கூறப்பட்ட நிலையில் வெளியீடு தள்ளிப்போவதாக இயக்குநர் ஆர்ஜே பாலாஜி தெரிவித்திருந்தார். படம் மே மாதம் வெளியாக வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Summary

Popular actor has sung the second song of actor Suriya's film Karuppu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.