மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழுக்கு வருவாரா சாரா அர்ஜுன்?

நடிகை சாரா அர்ஜுன் குறித்து...

News image

சாரா அர்ஜுன்

Updated On :25 மார்ச் 2026, 7:14 am

நடிகை சாரா அர்ஜுன் துரந்தர் திரைப்படம் மூலம் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுள்ளார்.

தெய்வத் திருமகள், சைவம் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பரவலான கவனத்தைப் பெற்றவர் நடிகை சாரா அர்ஜுன். இயக்குநர் மணிரத்னம் இயக்கிய, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இளவயது ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்திலும் நடித்து கவனம் ஈர்த்தார்.

குழந்தை நட்சத்திரமாகவே பார்க்கப்பட்ட சாரா, இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த துரந்தர் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதில், நாயகன் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடித்திருந்தார். இதுவரை குழந்தை நட்சத்திரமாகவே பார்க்கப்பட்ட சாரா, நாயகியாக ஜொலிப்பாரா எனக் கேள்விகள் இருந்தன.

Story image

அதற்கு பதிலடியாக துரந்தர், துரந்தர் - 2 ஆகிய இரண்டு படங்களிலும் கவனிக்கத்தக்க நடிப்பை வழங்கி புகழடைந்துள்ளார். இந்த வெற்றியால் அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் சாரா ஒப்பந்தம் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

அதேநேரம், இனி சாரா அர்ஜுன் தமிழ்த் திரைப்படங்களில் நாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதா? எனக் கேள்விகளும் எழுந்துள்ளன.

இயக்குநர் ஏ.எல். விஜய்யின் வழிகாட்டல் மூலமே சாரா திரைப்படங்களைத் தேர்வு செய்வதாகவும் கூறப்படுகிறது!

Summary

Actress Sara Arjun has garnered huge attention with the film Duranthar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.