மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

7 நாள்களில் ரூ. 1,000 கோடி! வசூல் சாதனையில் துரந்தர் 2!

ரன்வீர் சிங்கில் நடிப்பில் வெளியான துரந்தர் 2 திரைப்படம் ரூ. 1,000 கோடி வசூலீட்டி சாதனை படைத்துள்ளதைப் பற்றி...

News image

துரந்தர் - எக்ஸ்.

Updated On :26 மார்ச் 2026, 6:47 am

ரன்வீர் சிங்கில் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள துரந்தர் 2 திரைப்படம் ரூ. 1,000 கோடி வசூலீட்டி சாதனை படைத்துள்ளது.

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்த துரந்தர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான துரந்தர்: தி ரிவென்ஞ்ச் மார்ச் 19 ஆம் தேதி வெளியானது. ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜூன், அக்‌ஷய் கன்னா, சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது.

பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள், மும்பை குண்டுவெடிப்பு சம்பவம், தீவிரவாத நடவடிக்கைகளை மையப்படுத்தி உருவாகியிருந்த முதல் பாகம் ஹிந்தி மொழியில் மட்டும் வெளியாகி ரூ. 1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதன் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் நேரடியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் படத்துக்கான சிறப்புக் காட்சிகள் ஒரு நாள் முன்னதாக, வெளியிடப்பட்டன. இருப்பினும் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், படத்தின் வசூல் சற்று தளர்ந்த நிலையில், மீண்டும் படத்தில் வசூல் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், துரந்தர்: தி ரிவென்ஞ்ச் படம் கடந்த 7 நாள்களில் உலகளவில் ரூ. 1,000 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதன்கிழமையான நேற்று சுமார் ரூ. 50 கோடி வசூலித்தாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் பாகத்திற்கான எதிர்பார்ப்புடன் இரண்டாம் பாகம் சுமார் 1,56,317 காட்சிகள் இதுவரை திரையிடப்பட்டுள்ளன. இந்திய அளவில் ரூ. 750 கோடிக்கும், வெளிநாடுகளில் ரூ. 240 கோடிக்கும் படம் வசூலித்துள்ளது. ஏற்கெனவே, ஸ்த்ரீ( ரூ. 857 கோடி), காந்தாரா (ரூ. 852 கோடி), ச்சாவா (ரூ. 807 கோடி) வசூலை முடியத்துள்ளது துரந்தர் 2.

படம் வெளியான முதல் வாரத்தில் மட்டும் சுமார் ரூ. 1,006 கோடி வசூலித்துள்ளது. இன்னும் சில நாள்களில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி திரைப்படத்தின் வாழ்நாள் வசூலான ரூ. 1042 கோடியை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Dhurandhar 2 Box Office Collection Day 7 Worldwide: Ranveer Singh-starrer is among the fastest Indian film to cross the Rs 1000 crore mark globally in a week's time. It has earned Rs 623.42 net in India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.