மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரூ.1,500 கோடி வசூலைக் கடந்த துரந்தர் தி ரிவெஞ்ச்!

நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படத்தின் வசூல் குறித்து...

News image

துரந்தர் தி ரிவெஞ்ச் படத்தின் போஸ்டர். - படம்: ஜியோ ஸ்டூடியோஸ்.

Updated On :3 ஏப்ரல் 2026, 10:00 am

நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படத்தின் வசூல் உலகம் முழுவதும் இரண்டு வாரங்களில் ரூ.1,500 கோடி வசூலித்து வரலாறு படைத்துள்ளது.

ஆதித்யா தார் இயக்கத்தில் பி62 ஸ்டூடியோஸ், ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.

பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள், மும்பை குண்டுவெடிப்பு சம்பவம், தீவிரவாத நடவடிக்கைகளை மையப்படுத்தி உருவாகியிருந்த முதல் பாகம் ஹிந்தி மொழியில் மட்டும் வெளியாகி ரூ.1,300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இதனைத் தொடர்ந்து வெளியான இதன் இரண்டாம் பாகம் இந்தியாவில் மட்டுமே ரூ.1,000 கோடி வசூலித்தது. தற்போது 15 நாள்களில் ரூ.1501 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Summary

இந்தியாவில் மட்டுமே இந்தப் படம் ரூ.1,134 கோடியும் வெளிநாடுகளில் ரூ. 367 கோடியும் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் அதிகம் வசூலித்த இந்திய திரைப்படமாக ஆமிர் கானின் தங்கல் ரூ.2,000 கோடி வசூலித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Summary

'Dhurandhar: The Revenge' grosses Rs 1,500 crore worldwide in two weeks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.