மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

துரந்தரில் சாரா அர்ஜுன் எப்படி தேர்வானார்?

சாரா அர்ஜுனைத் துரந்தர் திரைப்படத்தில் தேர்வு செய்தது குறித்து...

News image

ரன்வீர் சிங்குடன் சாரா அர்ஜுன் - dhurandhar

Updated On :5 ஏப்ரல் 2026, 7:59 am

நடிகை சாரா அர்ஜுன் துரந்தர் திரைப்படத்தில் தேர்வு செய்யப்பட்டது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தை நட்சத்திரமாகவே பார்க்கப்பட்ட சாரா, இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த துரந்தர் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதில், நாயகன் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடித்திருந்தார். இதுவரை குழந்தை நட்சத்திரமாகவே பார்க்கப்பட்ட சாரா, நாயகியாக ஜொலிப்பாரா எனக் கேள்விகள் இருந்தன.

அதற்கு பதிலடியாக துரந்தர், துரந்தர் - 2 ஆகிய இரண்டு படங்களிலும் கவனிக்கத்தக்க நடிப்பை வழங்கி புகழடைந்துள்ளார். இந்த வெற்றியால் அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் சாரா ஒப்பந்தம் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

அதேநேரம், இனி சாரா அர்ஜுன் தமிழ்த் திரைப்படங்களில் நாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதா? எனக் கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்த நிலையில், இவ்வளவு பெரிய திரைப்படத்தில் சாராவைத் தேர்வு செய்தது குறித்து படத்தின் நடிகர்கள் தேர்வாளரான (கேஸ்டிங் கோச்) முகேஷ் சாப்ரா கூறும்போது, “துரந்தர் திரைப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கவனமாகத் தேர்வு செய்தோம். முக்கியமாக, கதாநாயகியாக நடிக்கக் கூடியவர் பிரபல முகமாக இருக்கக் கூடாது என நானும் இயக்குநர் ஆதித்யா தரும் உறுதியாக இருந்தோம்.

துரந்தரில் சாரா அர்ஜுன்

துரந்தரில் சாரா அர்ஜுன்

இதற்கிடையே, ரன்வீருக்கு ஜோடியாக என்னை நடிக்க வைங்க என பல நடிகைகள் எனக்கும் ஆதித்யாவுக்கு விருப்பம் தெரிவித்தனர். ஆனால், புதிய முகமாகவும் பாகிஸ்தான் பெண் என நம்பும்படியான தோற்றத்திலும் இருக்க வேண்டுமென 1200க்கும் மேற்பட்ட பெண்களை ஆடிசன் செய்தோம். அதில், கலந்துகொண்ட ஒருவர்தான் சாரா அர்ஜுன். அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும் பாலிவுட்டுக்கு புதிது. கண்டிப்பாக இது ஆச்சரியப்படுத்தும் என நம்பினோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பெண்களுக்கு மத்தியில் சாரா அர்ஜுன் தேர்வாகியிருக்கும் தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Summary

Information has been released about actress Sara Arjun being cast in the film Durandhar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.