இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்தது குறித்து பேசியுள்ளார்.
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து நடிகர் பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கிய டிராகன் திரைப்படம் ரூ. 150 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமானது.
தற்போது, நடிகர் சிலம்பரசனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, நாயகியாக மிருணாள் தாக்குர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய அஷ்வத் மாரிமுத்துவிடம் நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்தை இயக்க நடந்த பேச்சுவார்த்தை குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அஷ்வத், “நடிகர் ரஜினிகாந்துக்கு கதை சொல்ல சென்றபோது திடீரென ஒரு பிரபல அரசியல்வாதி அவரைச் சந்திக்க வந்தார். என்னிடம் வந்த ரஜினி, ‘மன்னித்துவிடுங்கள். திடீரென அவர் வந்துவிட்டார். 20 நிமிடம் காத்திருக்க முடியுமா?” எனக் கேட்டார். அவர் நினைத்திருந்தால் 10 நாள் கழித்து கூட வர சொல்லியிருக்கலாம். ஆனால், என்னிடம் அவர் நடந்துகொண்டது உண்மையில் ஆச்சரியப்படுத்தியது.
தலைவர் - 173 திரைப்படத்திற்காக நான் அவருக்கு 1.45 மணிநேரம் கதை சொன்னேன். இடைவேளைக் காட்சி சுவாரஸ்யமாக இருந்ததால் சாப்பிடக்கூட செல்லாமல் ஆர்வமாகக் கேட்டார். அவருக்கு கதை பிடித்திருந்தது.
ஆனால், வேறு சில காரணங்களால் இப்படம் அமையாமல் போய்விட்டது. கண்டிப்பாக, நடிகர்கள் ரஜினிகாந்த் அல்லது கமல் ஹாசனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
director ashwath marimuthu shares his opportunity with rajini 173
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாக்ஸிக் ஆழமான உளவியல் அம்சங்கள் கொண்ட திரைப்படம்: யஷ்

சீமானால், பாலா முன் அழுத இயக்குநர் பாலு மகேந்திரா!
அன்று அனிருத் செய்த உதவி... கண்கலங்கிய விக்னேஷ் சிவன்!

அஜித் - ஷாலினியால் உருவான ஹாய்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



