தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அன்று அனிருத் செய்த உதவி... கண்கலங்கிய விக்னேஷ் சிவன்!

அனிருத் குறித்து விக்னேஷ் சிவன்...

News image

விக்னேஷ் சிவன், அனிருத்

Updated On :8 ஏப்ரல் 2026, 3:55 pm IST

இயக்குநர் விக்னேஷ் சிவன் இசையமைப்பாளர் அனிருத் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் இறுதியாக சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஆனால், இவை இரண்டும் கலவையான விமர்சனங்களையே பெற்றன.

தற்போது, நடிகர் பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்ஐகே திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் ஏப். 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று (மார்ச் 7) சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய விக்னேஷ் சிவன், “நானும் ரௌடிதான் திரைப்படத்தைப் பாண்டிச்சேரியில் எடுக்க வேண்டும் என நினைத்திருந்திருந்தேன். அதற்காக, அங்கு சென்று படப்பிடிப்புக்கான இடங்களைப் பார்க்கத் திட்டமிட்டேன். ஆனால், அன்று என்னிடம் ரூ. 250 தான் இருந்தது. அப்போது அதுதான் நிலைமை. அனிருத்திடம் கூறிவிட்டு இரவு பேருந்தில் ஏறினேன்.

கொஞ்ச நேரம் கழித்து அனிருத்திடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், “விக்கி உங்கள் பையில் ரூ. 50 ஆயிரம் வைத்திருக்கிறேன்” என்றார். அதனைக் கண்டதும் அப்பேருந்தின் ஜன்னல் கம்பிகள் முழுக்க என் கண்ணீராகத்தான் இருந்திருக்கும். என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பெரிய பரிசு அனிருத். அவர் எப்போதும் எனக்கு இசையமைக்கக் கூடியவராகவும் உள்ளார். எல்ஐகே மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறேன். கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றாது” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

director vignesh shivan shares his emotional incident with musician anirudh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.