ஹாய் திரைப்படம் குறித்து இயக்குநர் விஷ்ணு எடவன் பேசியுள்ளார்.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படத்துக்கு “ஹாய்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய இயக்குநர் விஷ்ணு எடவன், “ஒவ்வொரு ஆணுக்கும் ஷாலினி மாதிரி மனைவி அமைய வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், ஷாலினி கிடைப்பதற்கு முன் அவர்கள் அஜித்தாக இருக்க வேண்டும். இதுதான் படத்தின் கதைக்கான ஐடியா. நல்ல வேலையில் இருக்கும் நாயகன் திருமணம் செய்ய விரும்புகிறான். அவனுக்கு விருப்பப்பட்ட மாதிரியே மனைவி அமைகிறார். அந்த மனைவிக்கு பிடித்த மாதிரி அவன் மாறுவதுதான் கதை.
நயன்தாராவுக்கு கவின் ஜோடியா என பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால், நயன் போன்ற ஒருவருக்கு ஜோடியாக நடிக்க தெரிந்த, இயல்பான முகம் இருக்க வேண்டும் என்பதற்காகவே நடிகர் கவினைத் தேர்தெடுத்தோம். இப்படத்தில், ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமானதுதான். இதன் காதல் தனித்துவமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
director vishnu edavan shares his hi movie idea and plot
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாக்ஸிக் ஆழமான உளவியல் அம்சங்கள் கொண்ட திரைப்படம்: யஷ்

முதல் பாடல், வெளியீட்டு அப்டேட்டை பகிர்ந்த ஹாய் படக்குழு!
தாயைத் தெய்வமாக அல்ல, மனுஷியாக பாருங்கள்: இயக்குநர் சசி
கர என்ன கதை? இயக்குநர் விளக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



