மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சூரி - 7 திரைப்படம் அறிவிப்பு!

நடிகர் சூரி நாயகனாக நடிக்கவுள்ள புதிய திரைப்படம் குறித்து...

News image

நடிகர் சூரி

Updated On :24 மார்ச் 2026, 12:27 pm

நடிகர் சூரி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பல மொழிகளில் பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான படங்களைத் தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்க, நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

'கொட்டுக்காளி’, ’விடுதலை’, ’மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி தற்போது முன்னணி கதாநாயகன் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

அறிவிப்பு போஸ்டர்

அறிவிப்பு போஸ்டர்

’இன்று நேற்று நாளை’ மற்றும் ’அயலான்’ போன்ற படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஆர். ரவிகுமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதற்கு முன்பு தமிழில் அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’ மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்த ’டியூட்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது.

தற்போது, தன் மூன்றாவது திரைப்படமாக சூரி - ரவிக்குமார் படத்தை தயாரிக்கவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.