மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்: அக்‌ஷய் குமார்

அக்‌ஷய் குமார் சொன்ன ரகசியம்...

News image

அக்‌ஷய் குமார்

Updated On :24 மார்ச் 2026, 11:26 am

நடிகர் அக்‌ஷய் குமார் தன் உடற்தகுதி குறித்து பேசியுள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்‌ஷய் குமார். பல ஆண்டுகளாகத் திரைத்துறையில் இருப்பதால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் வைத்துள்ளார்.

கதையசமுள்ள படங்களைத் தேர்வு செய்வதால் பெரும்பாலும் இவரது படங்கள் வணிக ரீதியாக மிக மோசமான படமாக இருப்பதில்லை. தமிழில் வெளியான ஜிகர்தண்டா, காஞ்சனா - 2, சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்களை ரீமேக் செய்தும் நடித்துள்ளார்.

58 வயதாகும் அக்‌ஷய் குமாரின் தோற்றத்திலும் உடலைப் பேணுவதால் ஆக்சன் கதைகளில் நன்றாகப் பொருந்தக்கூடியவராகவே உள்ளார்.

இந்த நிலையில், நேர்காணலில் உங்க ஃபிட்னஸ் ரகசியம் என்ன? என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அக்‌ஷய் குமார், “சூரியன் மறைவதற்கு முன்பாக மாலை 6.30 மணிக்கெல்லாம் இரவு உணவை முடித்துவிடுவேன். இதைவிட பெரிய மந்திரம் எதுவும் இல்லை. இதனை மருத்துவர்களும் மறுக்க மாட்டார்கள்.

உங்கள் உடல்தகுதிக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம். உடற்தகுதி என்பது 2 நிமிட நூடுல்ஸாக இருக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

actor akshay kumar told had a dinner at before 6.30 pm it will helps your fitness

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.