பாரதி கண்ணம்மா நாயகன் அருண் பிரசாத், ஆதலால் காதல் செய்வீர் என்ற புதிய தொடரில் நாயகனாக நடிக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பிரபலமடைந்த தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடர் கணவன் - மனைவி இடையே நடக்கும் புரிதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.
இத்தொடரில் ரோஷினி, அருண்பிரசாத், ஃபரீனா, ரூபாஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். கடந்த 2019 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட இத்தொடர் 2023 பிப்ரவரி வரை 1000 எபிஸோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பானது.
இத்தொடருக்கு கிடைத்த வரவேற்பையடுத்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. இந்தத் தொடர் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டது.
பாரதி கண்ணம்மா தொடரின் முதல் பாகத்தில் நாயகனாக நடித்து பிரபலமான அருண் பிரசாத், பிக் பாஸ் - 8 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் மனங்களை வென்றார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் அருண் பிரசாத் ,ஆதலால் காதல் செய்வீர் புதிய தொடரில் நடிக்கிறார். இந்தத் தொடரை பேயொண்ட் சினிமா தயாரிக்கிறது.
மேலும், பாக்கியலட்சுமி தொடரில் இணையாக நடித்து கவனம் பெற்ற சுசித்ரா, சதீஷ் ஜோடி, இந்தப் புதிய தொடரிலும் கணவன், மனைவியாக நடிக்கின்றனர்.
ஆதலால் காதல் செய்வீர் தொடரின் முன்னோட்டக் காட்சி, ஓளிபரப்பு தேதி, நேரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Bharathi Kannamma hero Arun Prasad is playing the lead role in the new series Aadalal Kadhal Seyveer.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுஷ் எழுதி பாடிய கர படத்தின் கண்ணம்மா பாடல்!

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு

சேலம் புதிய ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம்

விறுவிறுப்பான கிளைமேக்ஸ் காட்சிகள்... நிறைவடைந்த காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



