அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

பிரியங்கா மோகன் மகிழ்ச்சி..! வெற்றிக் கொண்டாட்டத்தில் மேட் இன் கொரியா படக்குழுவினர்!

நடிகை பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா படத்தின் வெற்றி குறித்து...

News image

வெற்றிக் கொண்டாட்டத்தில் மேட் இன் கொரியா படக்குழுவினர். - படங்கள்: இன்ஸ்டா / பிரியங்கா அருள் மோகன்.

Updated On :20 மார்ச் 2026, 9:33 am

நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ படத்தின் வெற்றியை நெட்பிளிக்ஸ் கொண்டாடியுள்ளது. இந்தக் கொண்டாட்டத்தில் பிரியங்கா மோகன் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

நித்தம் ஒரு வானம் படத்தின் இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி உள்பட 12 மொழிகளில் மார்ச் 12ஆம் தேதி வெளியானது.

இந்தப் படத்தில் நாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த பெண், கொரிய கலாசாரத்தின் மீதுள்ள ஈர்ப்பால் தென் கொரியாவிற்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு அவர் சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி ’பீல் குட்’ பாணியில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் வெற்றியைப் படக்குழுவுடன் சேர்ந்து நெட்பிளிக்ஸ் கொண்டாடியுள்ளது.

இந்த வெற்றி விழாவில் நடிகை பிரியங்கா மோகன், இயக்குநர் ரா. கார்த்திக் உடன் படக்குழுவினர் மற்றும் நெட்பிளிக்ஸ் நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.

Summary

Netflix celebrates the Global success of Priyanka Mohan Made In Korea with its incredible team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.