நடிகை ரஷ்மிகா மந்தனா தெலங்கானா கத்தார் திரைப்பட விருதுகள் விழாவில் ’தி கேர்ள் பிரண்ட்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருது வென்றார்.
சமீபத்தில், நடிகை ரஷ்மிகா மந்தானாவுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
உகாதி திருநாளை முன்னிட்டு தெலங்கானா கத்தார் திரைப்பட விருதுகள் நடைபெற்றன. இந்த விழாவில் ’தி கேர்ள் பிரண்ட்’ படத்தில் பூமா தேவி என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பதால் இந்த விருது கிடைத்துள்ளது.
திருமணத்துக்குப் பிறகு நடிகை ரஷ்மிகா பெறும் மிகப்பெரிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதினை நடிகர் ராம் சரண், தெலங்கானா முதல்வர் முன்னிலையில் வழங்கினார்.
இந்த விருது விழாவில் அவரது மாமியார் மாதவி தேவரகொண்டாவுடன் ரஷ்மிகா வந்திருந்தார். இந்த விருதுக்குப் பிறகு ரஷ்மிகா பேசியிருப்பதாவது:
தொடக்கத்தில் என்னுடைய நடிப்பை கிண்டல் செய்தார்கள். தற்போது, மாநில விருது கிடைத்திருக்கிறது. நான் நீண்ட தூரம் பயணித்திருக்கிறேன் என்றார். இந்தக் காட்சிகளை அவரது மாமியார் நெகிழ்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
நாக சைதன்யா சிறந்த நடிகர் விருதும் கமல் ஹாசன் பைதி ஜெய்ராஜ் விருதும் வென்றார்கள்.
நடிகை ரஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து ரணபலி எனும் படத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
Summary
Newlywed Rashmika Mandanna attends TGFA 2025 with mother-in-law, wins big for The Girlfriend.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெளிநாட்டில் தீவிர சண்டைப் பயிற்சியில் ரஷ்மிகா..! ஒரு நாளைக்கு 8 மணி நேர உழைப்பு!

விமான நிலையத்தில் பிறந்த நாளைக் கொண்டாடிய ரஷ்மிகா!

கமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது

திருமண கொண்டாட்டத்தில் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



