விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா தங்களது திருமணத்துக்கு முன்பான முன்னோட்டத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்கள்.
நீண்ட நாள்களாக காதலித்து வந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு வரும் பிப்.26 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள்.
நடிகர் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து கீதா கோவிந்தம் (2018), மை டியர் காம்ரேட் (2019) ஆகிய படங்களில் ஒன்றாக நடித்திருந்தார்கள்.
இந்தாண்டு செப்டம்பரில் வெளியாகவிருக்கும் ரணபலி எனும் படத்தில் ஒன்றாக நடித்துள்ளார்கள்.
இருவருக்கும் வருகிற பிப். 26 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கோட்டையில் எளிமையாக திருமணம் நடக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்,ஹைதராபாதில் மார்ச் 4 ஆம் தேதி பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
நடிகர் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் பத்திரிகை இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் பீச் வாலிபால் விளையாடும் காட்சியைப் பகிர்ந்துள்ளார்.
நடிகை ரஷ்மிகா மந்தனா வரவேற்பு நிகழ்ச்சியின் பத்திரிகையையும், மேசையில் பழங்கள் உடன் இருக்குமாறு இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
ஜப்பானிய பாரம்பரியத்தின்படி இரவு உணவை உண்டு திருமணத்துக்கு தயாராகி வரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Summary
Vijay Deverakonda and Rashmika Mandanna have posted a sneak peek of their pre-wedding shoot on Instagram.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெளிநாட்டில் தீவிர சண்டைப் பயிற்சியில் ரஷ்மிகா..! ஒரு நாளைக்கு 8 மணி நேர உழைப்பு!

விமான நிலையத்தில் பிறந்த நாளைக் கொண்டாடிய ரஷ்மிகா!

தாய்லாந்தில் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா!

விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


