மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிரியங்கா மோகனின் ‘மேட் இன் கொரியா’ ஓடிடியில் வெளியானது!

பிரியங்கா மோகன் நடித்த ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் ஓடிடியில் வெளியானது பற்றி...

News image

மேட் இன் கொரியா போஸ்டர் - X

Updated On :12 மார்ச் 2026, 7:49 am

நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவான மேட் இன் கொரியா திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.

நித்தம் ஒரு வானம் படத்தின் இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படம் மேட் இன் கொரியா. இதில், நாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த பெண், கொரிய கலாசாரத்தின் மீதுள்ள ஈர்ப்பால் தென் கொரியாவிற்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு அவர் சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி பீல் குட் பாணியில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், மேட் இன் கொரியா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.

Summary

Priyanka Mohan's 'Made in Korea' released on OTT

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.