தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிலம்பரசனுக்கு ஜோடியான பிரியங்கா மோகன்!

அரசனில் இணைந்துள்ள பிரியங்கா மோகன் குறித்து...

News image

சிலம்பரசன், பிரியங்கா மோகன்

Updated On :26 மார்ச் 2026, 10:34 am

நடிகை பிரியங்கா மோகன் அரசன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறாராம்.

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் படங்களில் நடித்துள்ளார்.

அழகான கதாநாயகி எனப் பெயரெடுத்தவர் பான் இந்தியளவில் கவனிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் பிரியங்காவால் வளர முடியவில்லை. அண்மையில், இவர் நடிப்பில் வெளியான மேட் இன் கொரியா திரைப்படம் வரவேற்பைப் பெற்றிருந்தது.

தற்போது, அரசன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பிரியங்கா மோகன்இணைந்துள்ளார். இதில், சிலம்பரசனுக்கு ஜோடியாக நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், வடசென்னை உலகில் பிரியங்கா மோகனும் இடம்பிடித்திருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகர்கள் யோகி பாபு, டிஜே ஆகியோர் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தைத் தொடர்ந்து இணையத் தொடர் மற்றும் தெலுங்கு படங்களில் பிரியங்கா கவனம் செலுத்த உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.