மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புகழ்பெற்ற டோரேமான் கார்ட்டூன் தொடரின் இயக்குநர் ஷிபயாமா காலமானார்!

புகழ்பெற்ற கார்ட்டூன் தொடரான டோரமானின் இயக்குநர் சுடோமு ஷிபயாமா காலமானார்...

News image

புகழ்பெற்ற டோரேமான் கார்ட்டூன் தொடரின் இயக்குநர் சுடோமு ஷிபயாமா காலமானார்... - எக்ஸ்

Updated On :19 மார்ச் 2026, 1:44 pm

உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் தொடரான டோரேமானின் இயக்குநர் சுடோமு ஷிபயாமா காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் அனிமேஷன் தொடர்களின் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் தொடர் “டோரேமான்”. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்ட இந்தத் தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், டோரேமான் தொடரின் இயக்குநரும், அஜியாடோ அனிமேஷன் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான சுடோமு ஷிபயாமா (வயது 84) கடந்த மார்ச் 6 அன்று காலமானதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) அன்று அஜியாடோ நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தச் செய்தியின் மூலம் இயக்குநர் சுடோமு ஷிபயாமா நீண்டகாலமாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, உலகம் முழுவதுமுள்ள டோரேமான் ரசிகர்கள் இயக்குநர் சுடோமு ஷிபயாமாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, டோரேமான் கார்ட்டூன் தொடர்களைக் கடந்த 1984 முதல் 2005 ஆம் ஆண்டு வரை இயக்குநர் சுடோமு ஷிபயாமா இயக்கியது குறிப்பிடத்தக்கது.

Summary

Tsutomu Shibayama, the director of the world-famous cartoon series Doraemon, has passed away.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.