மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!

புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லே லேசான மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

News image

ஆஷா போஸ்லே

Updated On :11 ஏப்ரல் 2026, 5:00 pm

புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லே லேசான மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தனித்துவமான குரலுக்குச் சொந்தமான புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லே. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத் துறையில் பங்காற்றி வருகிறார்.

பின்னணி பாடகரான இவர் பல்வேறு இந்திய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

இந்திய இசையுலகில் இவரது சாதனைகளைப் போற்றும் விதமாக தாதா சாகேப் பால்கே விருது, பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், பல தேசிய விருதுகள் மற்றும் ஃப்லிம்ஃபேர் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

தற்போது 92 வயதான ஆஷா போஸ்லே, லேசான மாரடைப்பு காரணமாக இன்று மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவர் விரைவில் குணமடைய திரை, இசைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Asha Bhosle hospitalised after mild heart attack

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.