நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் உருவான காட்டான் தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.
காக்கா முட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். தொடர்ந்து, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கி தனித்துவனமான கவனம் பெற்றார்.
இறுதியாக, இவர் இயக்கிய கடைசி விவசாயி மிகச்சிறந்த இயக்குநர் என்கிற பெயரைப் பெற்றுத்தந்ததுடன் பலரும் கொண்டாடும் படமாகவும் மாறியது. கடைசி விவசாயி படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதியும் மணிகண்டனும் புதிய இணையத் தொடர் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இத்தொடருக்கு, “முத்து என்கிற காட்டான்” எனப் பெயரிட்டுள்ளனர்.
தற்போது, இதன் டீசரை வெளியிட்டுள்ளனர். இதில், உடல் இல்லாத விஜய் சேதுபதியின் தலை காட்டப்படுகிறது. மேலும், வசனம் வாயிலாக விஜய் சேதுபதி, ‘என் முண்டத்தைக் கண்டுபிடிங்க’ என்கிறார்.
இத்தொடர் வருகிர மார்ச் 27 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூறு சாமி டீசர்!
நூறு சாமி டீசர்!
மனிதனுக்கும் சாத்தானுக்கும் இடையே கடவுளுக்கு என்ன வேலை? பள்ளிச்சட்டம்பி டீசர்!
சசிகுமாரின் வதந்தி - 2 டீசர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

