ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம் ஆஸ்கர் விருது விழாவில், “போர் வேண்டாம். பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஜேவியர் பார்டெம் மற்றும் நடிகை பிரியங்கா சோப்ரா இணைந்து சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதை அறிவித்தார்கள்.
நார்வே நாட்டில் உருவாக்கப்பட்ட சென்டிமென்டல் வேல்யூ (Sentimental Value) என்ற திரைப்படத்துக்கு சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது.
ஈரான் - இஸ்ரேல் போருக்கு மத்தியில் இந்த ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஜனவரியில் நாமினேஷன் செய்யப்பட இருந்த விருதுகள் கலிஃபோர்னியா காட்டுத்தீயினால் தேதி மாற்றப்பட்டது.
ஸ்பானிஷ் நாட்டைச் சேர்ந்த ஜேவியர் பார்டெம் முன்னதாக, “இஸ்ரேல் 4கே தொழில்நுட்பத்தில் நமது கண்களின் முன்பாக காஸாவில் இனப்படுகொலையை நடத்திவருகிறது” எனக் கூறியிருந்தார்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போருக்கு எதிராகவும் தனது சட்டையில் பின் பேட்ஜ் ஒன்றைக் குத்தியிருந்தார். ஆஸ்கர் மேடையில் ஜேவியர் பார்டெம் பேசியதாவது:
நான் இந்த பின் பேட்ஜை 2003ல் இராக் போரின்போது குத்தியிருந்தேன். தற்போது, 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சட்ட விரோதமான போரை ஒரு பொய்யினால் டிரம்ப் மற்றும் நெதன்யாகுவினால் உருவாக்கப்பட்டுள்ளது என்று பேசினார்.
ஜேவியர் பார்டெம் நடித்த எஃப்1 படத்துக்கு சிறந்த சப்தத்திற்கான விருது வழங்கப்பட்டது. இதுவரை, 72,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது
Summary
Priyanka Chopra By His Side, Javier Bardem Says 'No To War, Free Palestine' At Oscars 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜுமான்ஜி 3 படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்!

ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர்! யார் இந்த ஆட்டம் டுரால்ட் அர்க்காபாவ்?

ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!

அவதார், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், சின்னர்ஸ் படங்களுக்கு ஆஸ்கர் விருது!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



