ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று (மார்ச் 16) காலை லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர் (One Battle After Another), ஃபிராங்கன்ஸ்டைன் (Frankenstein) திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன.
திரையுலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவின் அகாதமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயின்சஸ் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 98-வது அகாதெமி விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி (திங்கள்கிழமை காலை 4.30 மணிக்கு) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தேர்வு செய்யப்பட்ட உலகின் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றன. இந்த விழாவை கோனன் ஓ'பிரையன் தொகுத்து வழங்கி வருகிறார்.
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெறுவதால், லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிறந்த துணை நடிகை
இந்த விழாவின் முதல் விருதாக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது, 'வெப்பன்ஸ்' (Weapons) படத்தில் நடித்த ஏமி மேடிகனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த அனிமேஷன்
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருது ‘கே பாப் டிமன் ஹண்டர்’ (K-Pop Demon Hunter) படத்துக்கும், சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருது 'தி கேர்ள் ஹூ கிரைட் பியர்ல்ஸ்' (The Girl Who Cried Pearls) குறும்படத்திற்கும் வழங்கப்பட்டது.
சிறந்த கதாபாத்திர தேர்வுக்குழு - best casting
பால் தாமஸ் ஆண்டர்சனின் 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' படத்தில் நடித்ததற்காக கசாண்ட்ராவுக்கு சிறந்த கதாபாத்திர வடிவமைப்புக்கான விருது வழங்கப்பட்டது.
சிறந்த ஆடை வடிவமைப்பு
சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான ஆஸ்கார் விருதை 'ஃபிராங்கண்ஸ்டைன்' படம் தட்டிச் சென்றது. மைக் ஹில், ஜோர்டான் சாமுவேல் மற்றும் கிளியோனா ஃபியூரி ஆகியோர் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுக் கொண்டனர்.
சிறந்த அசல் திரைக்கதை
சிறந்த அசல் திரைக்கதைக்கான விருது 'சின்னர்ஸ்' படத்துக்காக இயக்குநர் ரயான் கூக்ளருக்கு வழங்கப்பட்டது. இந்தத் திரைப்படம் 16 பிரிவுகளின் கீழ் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு சாதனையும் படைத்திருந்தது.
சிறந்த தழுவல் திரைக்கதை
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது ஒன் பேட்டில் ஆப்டர் அனதர் திரைப்படத்துக்காக தாமஸ் ஆண்டர்சனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகர் - best supporting actor
சிறந்த துணை நடிகருக்கான விருது ஒன் பேட்டில் ஆப்டர் அனதர் படத்தில் நடித்த சீன் பென்னுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த அதிரடி குறும்படம்
சிறந்த அதிரடி குறும்படத்துக்கான விருது சாம் ஏ. டேவிஸ் மற்றும் ஜாக் பிட்டின் தி சிங்கர்ஸ், அலெக்ஸாண்டர் சிங் மற்றும் நட்டாலி முஸ்டேட்டாவின் டு பீபுள் எக்ஸ்சேஞ்சிங் சலைவா படத்துக்கு ஆஸ்கர் விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் வரலாற்றில் இந்தப் பிரிவில் விருது பகிர்ந்தளிக்கப்படுவது இது ஏழாவது முறையாகும்.
சிறந்த தயாரிப்பு வடிவம் - ஃபிராங்கன்ஸ்டைன்
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்
அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படத்துக்காக ஜோ லெட்டெரி, ரிச்சர்ட் பேன்ஹாம், எரிக் சைண்டன், டேனியல் பாரெட் உள்ளிட்டோர் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்-க்கான ஆஸ்கர் விருதைப் பெற்றனர்.
Summary
Follow our live coverage of the 2026 Oscars as frontrunners 'One Battle After Another' and 'Sinners' headline a tightly contested race, with winners, major upsets, and real-time updates from Hollywood’s biggest awards ceremony
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை டெக்கான் பம்ப்ஸ் நிறுவனத்துக்கு சிறந்த உற்பத்தியாளா் விருது

ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர்! யார் இந்த ஆட்டம் டுரால்ட் அர்க்காபாவ்?

ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!

சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


