மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரஜினி - 173 முழுக்கதை தயார்!

ரஜினி -173 திரைப்படம் குறித்து...

News image
Updated On :5 மார்ச் 2026, 11:50 am

நடிகர் ரஜினிகாந்த் - 173 திரைப்படத்தின் கதை, திரைக்கதை முழுமையாகத் தயாராகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் செல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், தன் 173வது திரைப்படமாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

கூலி, ஜெயிலர் - 2 ஆகிய திரைப்படங்கள் ஆக்சன் படங்கள் என்பதால் அடுத்த திரைப்படத்திலாவது ஜனரஞ்சகமாக நடிக்க வேண்டும் என்பதற்காகவே இயக்குநர் சுந்தர். சி படத்தில் ஒப்பந்தமானார்.

ஆனால், சில காரணங்களால் சுந்தர் சி விலக, தற்போது சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். இதன், அறிமுக விடியோவில் இடம்பெற்ற ரஜினியின் தோற்றமும் அனிருத்தின் பின்னணி இசையும் கவர்ந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கவுள்ள நிலையில், இதன் முழுக்கதையும் திரைக்கதையும் தயாராகிவிட்டதாகவும் படமும் ஆரம்பமானதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.