இயக்குநர் பாக்யராஜ் இயக்கிய முதல் ஹிந்திப் படமே பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இயக்குநர் பாரதிராஜா இயக்கிய ஒரு கைதியின் டைரி திரைப்படம் தமிழில் பெரிய வெற்றியைப் பெற்றது. கதை பாக்யராஜ் எழுதியதால் எங்கும் சோர்வடையாத திரைக்கதை எனப் பாராட்டுகளைப் பெற்றிருந்தது. தெற்கில் ஒரு படம் வெற்றி பெற்றால் வடக்கிற்கும் வடக்கில் ஹிட் அடித்தால் தெற்கிற்கும் என ரீமேக்குகள் பறந்துகொண்டிருந்த காலம் என்பதால் ஒரு கைதியின் டைரியை ஹிந்தியில் ரீமேக் செய்ய பாக்யராஜுக்கு அழைப்பு வந்தது.
அதற்கு முன்பே முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள் உள்ளிட்ட பெரிய வெற்றிப்படங்களைப் பாக்யராஜ் கொடுத்திருந்ததால் அந்த தைரியத்தில் தன் முதல் ஹிந்தி திரைப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டார்.
இந்தியாவே வியந்துகொண்டிருந்த நடிகர் அமிதாப் பச்சனை வைத்து ஒரு கைதியின் டைரி படத்தை பாக்யராஜ் ரீமேக் செய்தார். 1986 ஆம் ஆண்டு ஹிந்தியில், “ஆக்ரி ராஸ்தா” எனப் பெயரிட்டு வெளியான இப்படம் அட்டகாசமான வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது. அமிதாப் பச்சனின் இரட்டை வேடமும் ரசிகர்களிடம் பேசப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ரசிகர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில், “என் அம்மா சொன்னார்; அமிதாப் பச்சன் நடித்த திரைப்படங்களிலேயே ஆக்ரி ராஸ்தா படமே சிறந்தது” எனப் பதிவிட்டிருந்தார். இதனைப் பகிர்ந்த அமிதாப் பச்சனும், இக்கருத்தை ஆமோதிக்கும் விதமாக இப்படத்தை நினைவு கூர்ந்தார்.
மேலும், ஹிந்தியில் தன் திரைப்படங்களான வீட்ல விஷேங்க படத்தை மிஸ்டர் பெச்சாரா (நடிகர்கள் அனில் கபூர், ஸ்ரீதேவி, நாகர்ஜூனா) வேட்டிய மடிச்சு கட்டு படத்தை பப்பா தி கிரேட் (நடிகர்கள் கிருஷ்ணகுமார், நக்மா) என்கிற பெயர்களில் பாக்யராஜ் ரீமேக் செய்ததிருந்தது குறிப்பிடத்தக்கது.
The very first Hindi film directed by Bhagyaraj turned out to be a huge success.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









