அதிரடி திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட திரைக்கலைஞரான பாசில் ஜோசஃப் தன் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.
அதிரடி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை அருண் அனிருதன் இயக்க, நடிகர்கள் டொவினோ தாமஸ், ரியா ஷிபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கல்லூரி பின்னணியில் உருவான இதில் நாயகனாக பாசில் ஜோசஃப் நடிக்க, வில்லனாக டொவினோ நடித்துள்ளார்.
அண்மையில் திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக இதுவரை ரூ. 75 கோடி வசூலித்துள்ளது. மே 22 ஆம் தேதி தமிழிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இப்படம் இம்மாதம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது, ஜூன் 18 ஆக இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The OTT release date for the action film has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









