தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மிகுந்த உணவுக் கட்டுப்பாட்டைப் பின் தொடர்ந்தேன்: கீர்த்தி சனோன்

நடிகை கீர்த்தி சனோன் ’காக்டைல் - 2’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியிருப்பதாவது...

News image

’காக்டைல் - 2’ படத்தில் கீர்த்தி சனோன். - படங்கள்: யூடியூப் / மடோக் ஃபிலிம்ஸ்.

Updated On :2 ஜூன் 2026, 7:36 pm IST

நடிகை கீர்த்தி சனோன் ’காக்டைல் - 2’ படத்துக்காக மிகுந்த உணவுக் கட்டுப்பாட்டைப் பின் தொடர்ந்ததாகக் கூறியுள்ளார். இந்தப் படம் ஜூன் 19ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

நடிகர் ஷாகித் கபூர் நடித்துள்ள ’காக்டைல்- 2’ என்ற புதிய படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ரஷ்மிகா மந்தனா, கீர்த்தி சனோன முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

நடிகை கீர்த்தி சனோன தெலுங்கில் நேனொக்கடினே என்ற மகேஷ் பாபு படத்தில் அறிமுகமானார். பின்னர், ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

நல்ல கதைகளைத் தேடி நடித்துவரும் கீர்த்தி சனோன் 2021ல் வெளியான மைமி படத்துக்காக தேசிய விருது பெற்றார். கடைசியாக நடிகர் தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் நேரடியாக ஹிந்தியில் உருவான தேரே இஷ்க் மே திரைப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார்.

இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.150கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், காக்டைல் - 2 என்ற படத்தில் நடித்துள்ள கீர்த்தி சனோன் படத்தில் மிகுந்த கட்டுக்கோப்பான உடல் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அவர் பேசியிருப்பதாவது:

முதல்முறையாக எனது வாழ்வில் மிகுந்த உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டேன். அதுவும் இத்தாலியில் இருக்கும்போது இப்படி செய்திருக்கிறேன். நான் எப்போதுமே பசியாக இருப்பேன் என்ற உண்மை ஷாகித் கபூருக்குத் தெரியும். அதற்கான பலன் கிடைத்துள்ளது எனக் கூறியுள்ளார்.

Summary

Kriti Sanon reveals she followed strict diet for her role in 'Cocktail 2'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.