ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தலைவரான தனுஷ்! குழப்பத்தில் ரசிகர்கள்!

நடிகர் தனுஷ் தலைவர் தனுஷ் ஆனது குறித்து....

actor dhanush

நடிகர் தனுஷ்

Published On :28 ஜூலை 2026, 11:58 am IST

நடிகர் தனுஷ் பிறந்த நாளில் அவரை தலைவர் எனக் குறிப்பிட்டு போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, லப்பர் பந்து இயக்குநர் இயக்கத்திலும் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் தமிழ் முருகன் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். மேலும், பல திரைப்பட இயக்குநர்கள் தனுஷுக்குக் கதை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், தனுஷின் பிறந்த நானான இன்று பொது போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், வழக்கத்திற்கு மாறாக, தலைவர் தனுஷ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்போஸ்டரை ஓம் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பகிர்ந்ததால் பலரும் அரசியலுக்குத் தனுஷ் வரப்போகிறார் என விமர்சித்தும் வருகின்றனர்.

Story image

அண்மையில், நலத்திட்ட உதவிகளை வழங்கிய தனுஷ் தன் ரசிகர்களிடம், “இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். நம் ஒற்றுமைக்குப் பெரிய சக்தி உண்டு. அதற்கு நோக்கமும் உண்டு. சும்மா வந்தோம், என்னைச் சந்தித்தோம், புகைப்படம் எடுத்தோம் என மட்டும் இருக்கக் கூடாது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சிக்கல்களில் இருந்தால் உதவுங்கள். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்யுங்கள். அதற்கு எல்லாரும் கைகோர்க்க வேண்டும். நீங்கள் அதனைச் செய்வீர்கள் என நம்புகிறேன். என்னை இன்னும் வேகமாக ஓட வைக்கும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி... ஓம் நமச்சிவாய... ஜெ..!” எனத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

A poster referring to actor Dhanush as 'Thalaivar' (Leader) has been released on his birthday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.