ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அர்ஜுனின் பிறந்த நாளில் புதிய பட போஸ்டர்!

நடிகர் அர்ஜுன் பிறந்த நாளில் வெளியான புதிய பட போஸ்டர் குறித்து...

Poster of Arjun's film.

அர்ஜுன் படதின் போஸ்டர். - படம்: எக்ஸ் / எஸ்விசிஎல்எல்பி

Published On :15 ஆகஸ்ட் 2026, 12:01 pm IST

நடிகர் அர்ஜுன் பிறந்த நாளில் புதிய பட போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளியான பிளாஸ்ட் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

நடிகர்கள் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த நாள்களில் டிக்கெட் விற்பனைகளும் அதிகரித்தன.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கு இயக்குநர் டாக்டர் அனில் விஸ்வநாத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தினை ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது.

தயாரிப்பு நிறுவனம் அர்ஜுன் புகைப்படத்தினைப் பகிர்ந்து, “பிறந்த நாள் வாழ்த்துகள் விராவி” எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் படத்தில் இவர் நாயகனாக நடிக்கிறாரா அல்லது வில்லனாக நடிக்கிறாரா என்பது குறிப்பிடப்படவிலை என்பது கவனிக்கத்தக்கது.

விரைவில் இந்தப் படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகுமென தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Summary

New Telugu movie poster on action king Arjun's birthday!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.