ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பேன்: ஜிவி பிரகாஷ்

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவளிப்பதாக ஜிவி பிரகாஷ் பேச்சு...

gv prakash and dhanush

ஜிவி பிரகாஷ், தனுஷ்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 12:13 pm IST

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தெரிவிப்பேன் என ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, லப்பர் பந்து இயக்குநர் இயக்கத்திலும் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் தமிழ் முருகன் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இதற்கிடையே, தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான முகாந்திரங்களும் தென்படுகின்றன.

முக்கியமாக, கடந்த மாதம் தன் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தனுஷ் கலந்துகொண்டார். அந்நிகழ்வில் தனுஷ், “இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். நம் ஒற்றுமைக்குப் பெரிய சக்தி உண்டு. அதற்கு நோக்கமும் உண்டு. சும்மா வந்தோம், என்னைச் சந்தித்தோம், புகைப்படம் எடுத்தோம் என மட்டும் இருக்கக் கூடாது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சிக்கல்களில் இருந்தால் உதவுங்கள். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்யுங்கள். அதற்கு எல்லாரும் கைகோர்க்க வேண்டும். நீங்கள் அதனைச் செய்வீர்கள் என நம்புகிறேன். என்னை இன்னும் வேகமாக ஓட வைக்கும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி” எனப் பேசியிருந்தார்.

இதனால், மறைமுகமாகவே தன் ரசிகர்களுக்கு அரசியல் அறிவிப்பைப் பதிவு செய்தார் என்றே தெரிகிறது. மேலும், போஸ்டர்களில் தலைவர் தனுஷ் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது அதனை உறுதிசெய்யும் விதமாகவே இருந்தது. தொடர்ந்து, தன் நற்பணி மன்றம் மூலமாக தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கை நடத்த தனுஷ் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷிடம், “நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு ஜிவி பிரகாஷ், “என் நண்பர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் என் ஆதரவு அவருக்கு இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தனுஷின் பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் என பல வெற்றிப்படங்களுக்கு ஜிவி இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

GV Prakash has stated that he would extend his support if actor Dhanush enters politics.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.