ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வேள்பாரியா? வெற்றி மாறனா? வெங்கட் பிரபுவா? விவாதிக்க வைத்த தனுஷ் போஸ்டர்!

நடிகர் தனுஷ் திரைப்படத்தின் போஸ்டர் குறித்து...

Published On :9 ஜூலை 2026, 5:33 pm IST

நடிகர் தனுஷின் புதிய திரைப்பட போஸ்டர் கேள்விகளை எழுப்பியுள்ளது.

நடிகர் தனுஷ் புதிய போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், ஆங்கிலத்தில் D - V என்கிற சொற்கள் இடம்பெற, இது தனுஷும் வெங்கட் பிரபுவும் இணையும் படம்தான் என தகவல்கள் வெளியாகின. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாகவும் கூறப்பட்டது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்தார். ஆனால், அது நடக்கவில்லை. தொடர்ந்து, சிலம்பரசன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனுஷின் இப்போஸ்டர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார்.

ஆனால், இந்தத் திரைப்படத்தின் புதிய போஸ்டரில், அதே சொற்கள் இடம்பெற்றிருந்தாலும், ”பணிந்தவரை விட்டு வைப்பான் பகைத்தவரை நட்டு வைப்பான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக, போஸ்டரில் போர்க் காட்சி போன்ற தோற்றமும் இடம்பெற்றுள்ளதால் இது இயக்குநர் ஷங்கர் இயக்கும் ‘வேள்பாரி’யாக இருக்கலாம் என்றும் ஊகிக்கப்பட்டுள்ளது.

இவை ஒருபுறம் என்றால் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் வடசென்னை - 2 திரைப்படத்தில் நடிக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரே போஸ்டரை வைத்து பல கோணங்களிலும் தனுஷ் விவாதிக்க வைத்தது கவனம் பெற்றுள்ளது.

Actor Dhanush's new movie poster has raised questions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.