ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தனுஷ் கொடுத்த அப்டேட்! இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறாரா?

நடிகர் தனுஷின் புதிய திரைப்படம் குறித்து...

Published On :8 ஜூலை 2026, 1:01 pm IST

நடிகர் தனுஷ் தன் அடுத்த திரைப்படம் குறித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் கர திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மம்மூட்டியும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது முடிந்ததும், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். ஆனால், இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் படத்திலிருந்து விலகிக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தனுஷே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Story image

இந்த நிலையில், நடிகர் தனுஷ் புதிய போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ஆங்கிலத்தில் D - V என்கிற சொற்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஜூலை 10 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது, சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்திற்கான மறைமுக அறிவிப்புதான் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாகக் கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்தார். ஆனால், அது நடக்கவில்லை. தொடர்ந்து, சிலம்பரசன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனுஷின் இப்போஸ்டர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actor Dhanush has released a poster for his next film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.