ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜன நாயகன் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை ரூ. 2,600! எங்கு?

ஜன நாயகன் திரைப்படத்தின் டிக்கெட் விலை குறித்து...

முதல்வர் விஜய்

Published On :22 ஜூலை 2026, 11:26 am IST

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் இந்தாண்டு பொங்கல் வெளியீடாக தேர்தலுக்கு முன்பே, ஜன. 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், சென்சார் பிரச்னைகளால் சிக்கலில் சிக்கிய, வெளியீட்டைக் காண மிகுந்த சிரமத்தைச் சந்தித்தது. மேலும், இணைய தளத்தில் வெளியாகி அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

தற்போது, தணிக்கை வாரியம் ஜன நாயகனுக்கு ஏ சான்றிதழைக் கொடுத்ததால் இத்திரைப்படம் நாளை (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் முதல்வராகியிருக்கும் சூழலில், அவரின் கடைசி திரைப்படம் என்பதால், தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் 1000 திரைகளிலும், உலகளவில் 3,000 திரைகளிலும் திரையிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல பகுதிகளிலும் டிக்கெட் முன்பதிவுகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பெங்களூரு கோரமங்கலாவிலுள்ள பிவிஆர் நெக்ஸஸ் திரையரங்கம் ஜன நாயகன் திரைப்படத்திற்கான முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலையை ரூ. 2600 வரை நிர்ணயித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அண்மையில் வெளியான ஒடிசி திரைப்படத்திற்கான ஐமேக்ஸ் டிக்கெட் விலைகூட இவ்வளவு இல்லை என ரசிகர்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் பிவிஆர் திரையரங்குகளில் ஒரு டிக்கெட் விலை ரூ. 183 என்பது (ஆன்லைன் புக்கிங் கட்டணம் இல்லாமல்) குறிப்பிடத்தக்கது.

The ticket price for the first show on the opening day of actor Vijay's movie Jana nayagan has come as a shock.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.