ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

லியோவை முறியடிக்காத ஜன நாயகன்..! முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து...

Leo and Jana Nayagan Film posters

லியோ, ஜன நாயகன் படங்களின் போஸ்டர்கள். - படங்கள்: எக்ஸ் / 7ஸ்கிரீன், கேவிஎன் புரடக்‌ஷன்ஸ்.

Published On :24 ஜூலை 2026, 1:14 pm IST

ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் ரூ.128 கோடி வசூலித்துள்ளதாக ஏசியன் பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் முதல் நாளில் ரூ.141 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் திரைப்படம் நேற்று (ஜூலை 23) உலகெங்கும் வெளியானது. இந்தப் படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் தாமதமாக வெளியானது.

இந்தப் படம் ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி இருந்தாலும் முதல் நாளில் தமிழகத்தில் பல திரையரங்குகளில் காட்சிகள் ஹவுஸ் ஃபுல் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகன் படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, நிழகல் ரவி, ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படம் தமிழகத்தில் ரூ.48 கோடி வசூலித்ததாகவும் வெளிநாட்டில் ரூ.30 கோடியும் மொத்தமாக ரூ.78 கோடி வரை வசூலித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக வசூல் குறித்து அறிவிக்காவிட்டாலும் ஜன நாயகன் லியோவின் முதல் நாள் வசூலை முறியடிக்கவில்லை என்றே பல ஊடகங்கள் வாயிலாக தெரிய வருகின்றது.

Summary

Jana nayagan fails to beat 'Leo'..! How much was the first-day collection?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.