ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தணிக்கை வாரியம் மீது எந்தக் கோபமும் இல்லை: இயக்குநர் ஹெச். வினோத்

இயக்குநர் ஹெச். வினோத் ஜன நாயகன் திரைப்படம் குறித்து பேச்சு....

இயக்குநர் ஹெச். வினோத்

Published On :21 ஜூலை 2026, 4:44 pm IST

இயக்குநர் ஹெச். வினோத் தணிக்கை வாரியம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் ஹெச். வினோத், “விஜய் சாரிடம் நிறைய பேர் கதை சொன்னார்கள். ஆனால், அவர்கள் சொன்ன கதையைவிட அவருக்கு பகவந்த் கேசரி திரைப்படத்தின் கதை பிடித்திருந்தது. என்னை அழைத்து ரீமேக் செய்ய முடியுமா? எனக் கேட்டார். தளபதி திரைப்படத்தை இயக்குவது பெரிய வாய்ப்பு என ஒப்புக்கொண்டேன். இருந்தாலும், அப்படம் முழுமையான ரீமேக் கிடையாது. முக்கியமான அரசியல் ஒன்றை பேசியுள்ளோம். அது விவாதமாகவும் மாற வேண்டும்.

சென்சார் சான்றிதழுக்கான தாமதத்தில் தணிக்கை வாரியம் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. படம் வெளியாகாததற்கு அவர்கள் மட்டும் காரணம் எனச் சொல்லிவிட முடியாது. இருந்தும், கடந்த 7 மாதங்களில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துள்ளோம். அதனைக் கடந்தும் வந்துவிட்டோம். உறுதியான தயாரிப்பாளர் என்பதால் அவரும் தைரியமாக இருந்தார். இதனைப் புரிந்துகொண்டு, மக்கள் இப்படத்திற்கு தங்களின் ஆதரவைக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Director H. Vinoth has stated that an injustice has been done to the film Jana Nayagan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.