ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிறந்த வசனத்துக்கான தேசிய விருதை வென்றார் லக்கி பாஸ்கர் பட இயக்குநர்!

லக்கி பாஸ்கர் திரைப்படத்துக்காக தேசிய விருது வென்ற இயக்குநர் வெங்கி அட்லூரி குறித்து...

Venky Atluri

வெங்கி அட்லூரி. - படம்: எக்ஸ் / சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ்.

Published On :18 ஜூலை 2026, 8:26 pm IST

லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் வசனத்துக்காக இயக்குநர் வெங்கி அட்லூரி தேசிய விருது வென்று அசத்தியுள்ளார். இதுதான் அவரது முதல் தேசிய விருது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2024ல் வெளியான இந்திய திரைப்படங்களுக்கான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் இயக்குநர் வெங்கி அட்லூரி விருது பெற்றுள்ளார்.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி செளதரி, ராம்கி ஆகியோர் நடித்த லக்கி பாக்ஸர் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2024ல் வெளியாகியது.

வங்கியில் பணிபுரியும் அதிகாரியான பாஸ்கர் (துல்கர் சல்மான்) பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் அரசை, வங்கி நிர்வாகத்தை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார் என்கிற கதையாக உருவான இப்படம் இந்தியளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தெலுங்கு படமான லக்கி பாஸ்கர் தமிழ், மலையாளம், ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. துல்கர் சல்மான் தமிழ், மலையாளம் மொழிகளில் டப்பிங் செய்திருந்தார்.

இந்தப் படத்தில் வரும் வசனங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வங்கியில் அவமானப்பட்டதும் துல்கர் சல்மான் பேசும் வசனங்கள் இன்றளவும் இன்ஸ்டா ரீல்ஸ்களில் வலம்வந்துகொண்டிருக்கின்றன.

Summary

National Award Best Dialogue Writer: Lucky Baskhar Venky Atluri

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.