ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிறந்த நடன இயக்குநர்: தமன்னாவின் பாடலுக்குக் கிடைத்த தேசிய விருது!

நடிகை தமன்னாவின் பாடலுக்காக சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது வென்ற விஜய் கங்குலி குறித்து...

Tamannaah Bhatia dance in Stree 2

தமன்னா பாட்டியாவின் பாடல் விடியோ போஸ்டர். - படம்: யூடியூப் / சரிகம மியூசிக்

Published On :18 ஜூலை 2026, 8:25 pm IST

சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது ஸ்ட்ரீ 2 படத்தில் நடிகை தமன்னா ஆடிய பாடலுக்கு நடனம் அமைத்த மாஸ்டர் விஜய் கங்குலி வென்றுள்ளார்.

2024ல் வெளியான இந்திய திரைப்படங்களுக்கான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் சிறந்த நடன இயக்குநராக விஜய் கங்குலி வென்றுள்ளார்.

ஸ்ட்ரீ படத்தின் இரண்டாம் பாகம் (ஸ்ட்ரீ 2) 2024 ஆகஸ்ட்டில் வெளியாகியது. இந்தப் படத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர். பங்கஜ் திரிப்பாதி, அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தை அமர் கௌசிக் இயக்க ஜியோ ஸ்டுடியோஸும் மட்டோக் பிலிம்ஸும் இணைந்து தயாரித்திருந்தது. இந்தப் படம் ரூ.800 கோடி வசூலித்து அசத்தியது.

இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தமன்னா நடனமாடிய ஆஜ் கி ராட் (Aaj Ki Raat) எனும் பாடல் விடியோவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தப் பாடம் யூடியூப்பில் மட்டுமே 105 கோடி பார்வைகளைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடலில் சிறப்பான நடனத்தை அமைத்ததுக்காக மாஸ்டர் விஜய் கங்குலிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

National award for Best Choreography: Tamannaah Bhatia dance in Stree 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.