ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்றார் சுகுமார்!

புஷ்பா 2 படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது வென்ற இயக்குநர் சுகுமார் குறித்து...

Actor Allu Arjun with Director Sukumar.

இயக்குநர் சுகுமார் உடன் நடிகர் அல்லு அர்ஜுன். - படம்: எக்ஸ் / அல்லு அர்ஜுன்.

Published On :18 ஜூலை 2026, 8:27 pm IST

சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான தேசிய விருது புஷ்பா 2 திரைப்படத்திற்காக இயக்குநர் சுகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய திரைப்படங்கள் 2024ல் வெளியான படங்களுக்கான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் இயக்குநர் சுகுமார் தனது முதல் தேசிய விருதை வென்றுள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜுன் - இயக்குநர் சுகுமார் ஆகியோரது கூட்டணியில் உருவாகி, கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “புஷ்பா -2” மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்தப் படம் ரூ.1,500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதில் ஃபகத் ஃபாசில், ரஷ்மிகா மந்தனா, சுனில், ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படம் சமீபத்தில் (ஜன.16) ஜப்பான் நாட்டின் திரையரங்குகளில் வெளியாகி அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் திரைக்கதை மிகவும் சுவாரசியமாக இருந்ததாக விமர்சனங்கள் வெளியாகியதும் கவனிக்கத்தக்கது.

Summary

Director Sukumar Wins National Award for Pushpa 2 Original Screenplay category

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.