ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பணிந்தவரை விட்டு வைப்பான் பகைத்தவரை நட்டு வைப்பான்: தனுஷ்

நடிகர் தனுஷ் தனது புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்...

Dhanush movie poster.

தனுஷ் பட போஸ்டர். - படம்: எக்ஸ் / தனுஷ்.

Published On :8 ஜூலை 2026, 7:08 pm IST

நடிகர் தனுஷ் தனது புதிய படத்தின் அப்டேட்டை புதிய போஸ்டர், வசனத்துடன் வெளியிட்டு சுவாரசியத்தைக் கூட்டியுள்ளார்.

நடிகர் தனுஷ் கர திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மம்மூட்டியும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

லப்பர் பந்து இயக்குநருடன் தனுஷ் நடிக்கவிருந்த படம் தாமதமாகும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

நடிகர் தனுஷ் புதிய போஸ்டர் ஒன்றை நேற்றுப் பகிர்ந்திருந்தார். அதில், ஆங்கிலத்தில் D - V என்கிற சொற்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஜூலை 10 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்திற்கான மறைமுக அறிவிப்புதான் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ”பணிந்தவரை விட்டு வைப்பான் பகைத்தவரை நட்டு வைப்பான்” எனப் பதிவிட்டுள்ளார். இதிலும் டி - வி என்ற எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் போஸ்டரின் வசனத்தை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Summary

He spares those who submit but plants those who oppose him: Dhanush.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.