/

தெறி மறுவெளியீடு ஒத்திவைப்பு!

நடிகர் விஜய்யின் தெறி படத்தின் மறுவெளியீடு ஒத்திவைக்கப்பட்டது...

News image
Updated On :13 ஜனவரி 2026, 12:32 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜய் நடிப்பில் உருவான “தெறி” திரைப்படத்தின் மறுவெளியீடு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் - இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவான முதல் திரைப்படம் “தெறி”. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார்.

2016 ஆம் ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற “தெறி” திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை விடுமுறைகளை முன்னிட்டு மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பொங்கலுக்கு வெளியாகும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க “தெறி” படத்தின் மறுவெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக, தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.

முன்னதாக, நடிகர் விஜய்யின் “ஜன நாயகன்” திரைப்படம் கடந்த ஜன.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.